search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக் பேக்"

    பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் ரெடி.

    ×